அரசு வேலை வாங்கித் தருவதாக 12 பேரிடம் மோசடி: அதிமுக பிரமுகர் சிறையில் அடைப்பு!

அரசு வேலை வாங்கித் தருவதாக 12 பேரிடம் மோசடி: அதிமுக பிரமுகர் சிறையில் அடைப்பு!

அரசு வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி பெண் உள்ளிட்ட 12 பேரிடம் சுமார் 60 லட்சம் வரை மோசடி செய்த அதிமுக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலூர், காகிதப்பட்டறை விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார்(36). இவர் அதிமுக ஜெயலலிதா பேரவையில் இணை செயலாளராக இருந்து வருகிறார். இவர் கடந்த அதிமுக ஆட்சியின் போது ரங்காபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ரேவதி என்பவரிடம், அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 8.25 லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். ஆனால் ரேவதிக்கு சுகுமார் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சுகுமாரிடம் ரேவதி பணத்தை திரும்ப கேட்டுள்ளார். பணத்தைத் திரும்பக் கொடுக்காமல் பல முறை ரேவதி அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.

இதனால் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் ரேவதி புகார் அளித்திருந்தார். இதையடுத்து சுகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரேவதி உள்ளிட்ட 12 பேரிடம் அரசு வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி சுமார் 60 லட்ச ரூபாய் வரை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in