அடுத்து காலியாகப் போகும் ஓபிஎஸ்ஸின் முக்கிய பதவி: அடையாறு நட்சத்திர விடுதியில் கூடும் அதிமுக எம்எல்ஏக்கள்!

அடுத்து காலியாகப் போகும் ஓபிஎஸ்ஸின் முக்கிய பதவி: அடையாறு நட்சத்திர விடுதியில் கூடும் அதிமுக எம்எல்ஏக்கள்!

எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நாளை மாலை நடைபெற இருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், அடையாறு பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. அப்போது ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பாஜக சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவிற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குப் பதிவு நடைபெறும் முறைகள், வாக்கு செலுத்துவது எப்படி என்பது குறித்து விளக்குவதற்காக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்குவதற்காகச் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் அரசு இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரசியல் கட்சி சார்ந்த கூட்டம் அங்கு நடைபெறக் கூடாது என ஓபிஎஸ் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதினார். இதையடுத்து அடையாறு பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் நாளை மாலை நான்கு மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் தேர்தல் விளக்க கூட்டம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி வேறொருவரை நியமிக்கும் முடிவை அங்கு எடுக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி ஆகிய இருவரில் ஒருவர் எதிர்க்கட்சி துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த தீர்மானத்தின் அடிப்படையில் சட்டமன்ற சபாநாயகர் மற்றும் சட்ட மன்ற செயலாளருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் வழங்குவார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in