`நீங்கள் சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டவர்'- மதுரையில் ஓபிஎஸ்சுக்கு எதிராக முழங்கிய ஈபிஎஸ் ஆதரவாளர்கள்

`நீங்கள் சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டவர்'- மதுரையில் ஓபிஎஸ்சுக்கு எதிராக முழங்கிய ஈபிஎஸ் ஆதரவாளர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

ஆலந்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜீவா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவில் தற்போது எழுந்துள்ள ஒற்றைத் தலைமை அனைத்து தொண்டர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளதால் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியை தலைமை தாங்க அறிவிக்க வேண்டும் என்றும், இதற்கு ஓபிஎஸ் வழி விட வேண்டும் எனவும் மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முன்பு அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலத்தூர் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ஜீவா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் வந்து மாலை அணிவித்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஜீவா, "அதிமுகவில் தற்போது எழுந்துள்ள ஒற்றைத் தலைமை அனைத்து தொண்டர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது. எனவே, எடப்பாடி பழனிச்சாமியை தலைமை தாங்க அறிவிக்க வேண்டும். இதற்கு ஓபிஎஸ் வழிவிட வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஈபிஎஸ் எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்டவர். ஓபிஎஸ் சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டவர். ஒட்டு மொத்த அதிமுக தொண்டர்களும் ஈபிஎஸ் தான் அதிமுகவிற்கு சரியான தலைமை என கருதுகிறார்கள். அதனால் ஈபிஎஸ் தலைமைக்கு வழிவிட வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in