அதிமுக ஒரு கொத்தடிமை கட்சி: அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதிஅதிமுக ஒரு கொத்தடிமை கட்சி: அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி

அதிமுக ஒரு கொத்தடிமை கட்சி. பாஜகவினருக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து விட்டு ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், " ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு என்பது 22 மாத கால திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம். அதிமுக ஒரு கொத்தடிமை கட்சி. பாஜகவினருக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டுத்தான் தேர்தலில் நிற்கிறார்கள். அடிமை சாசனம் எழுதிக்கொடுத்த கட்சியைப் பற்றி நாங்கள் விமர்சனம் செய்யத் தயாராக இல்லை.

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ஈரோடு கிழக்கில் இதுவரை நடந்த தேர்தல்களில் வெற்றி வித்தியாசத்தைவிட அதிக வாக்குகளுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். மத்தியில் மாற்றத்தை கொண்டு வந்தால் தான் நாட்டை காப்பாற்ற முடியும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in