`இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்கணும்'- ஈபிஎஸ்-க்கு நீதிமன்றம் நோட்டீஸ்

`இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்கணும்'-  ஈபிஎஸ்-க்கு நீதிமன்றம் நோட்டீஸ்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து பதில் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ், அவரது இரண்டு மகன்கள் உள்பட ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கி வருகிறார் ஈபிஎஸ்.

இதனிடையே, ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடந்த வன்முறையில் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து இரு தரப்பினரும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஈபிஎஸ் தரப்பிடம் கட்சியின் அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டது. அதன்படி, கட்சியின் சாவி ஒப்படைக்கப்பட்டு அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.

இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், கட்சியில் முடிவுகளை எடுக்கவும், பதவி நீக்கம், நியமனம் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் பதில் அளிக்க அதிமுக தலைமை மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

இதனிடையே, ஒற்றைத் தலைமையை உருவாக்குவதற்காக நிறைவேற்றிய தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள பிரதான வழக்கின் விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தி வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in