
``தமிழகத்தில் ஆவின்பால் தட்டுப்பாடு இல்லை. பால் உற்பத்தியாளர்களை போராடும் படி அதிமுக தூண்டிவிடுகிறது'' என பால்வளத்துறை அமைச்சர் நாசர் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், ‘’9,354 சங்கங்களில் ஒரே ஒரு சங்கம் மட்டுமே போராட்டத்தை அறிவித்துள்ளது. ஏற்கெனவே பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கியுள்ளோம். மீண்டும் உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்பதில் நியாயம் இல்லை. தமிழ்நாட்டில் ஒரு இடத்தை தவிர வேறு எங்கும் பால் நிறுத்தம் இல்லை. தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி பால் விநியோகம் நடைபெற்றுள்ளது. எந்த சூழலையும் சந்திப்பதற்கு அரசு தயார் நிலையில் உள்ளது.
ஈரோட்டில் ஒரு சில இடத்தில் பால் உற்பத்தியாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவின் தூண்டுதலின் பேரில் போராட்டத்தை நடத்தியுள்ளனர்’’ என குற்றம்சாட்டினார்.