`சசிகலா அம்மா பூட்டும், சாவியும் கொடுத்து அனுப்பினாங்க'- அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்க வந்த தொண்டரால் பரபரப்பு!

`சசிகலா அம்மா பூட்டும், சாவியும் கொடுத்து அனுப்பினாங்க'- அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்க வந்த தொண்டரால் பரபரப்பு!

சென்னை அதிமுக அலுவலகம் அருகே பூட்டு, சங்கிலியோடு தலைமை அலுவலகத்திற்குச் சீல் வைக்க வந்த சசிகலா ஆதரவாளரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு நடைபெற்ற நேரத்தில், அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களோடு நுழைந்தார் ஓபிஎஸ். அப்போது அங்கிருந்த ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. இதையடுத்து அங்கு வந்த வருவாய்த்துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சீல் வைத்திருந்தனர். இது தொடர்பாக இருதரப்பிலும் காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதம் ஏற்படாதவாறு அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இன்று சசிகலா ஆதரவாளர் ஒருவர் கையில் பூட்டு மற்றும் சங்கிலியோடு அதிமுக அலுவலகத்திற்குச் சீல் வைக்க வந்ததால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பூட்டுச் சங்கிலியோடு வீடியோவில் இருக்கும் நபர், “அதிமுக ஆபீஸுக்கு சீல் வைக்க சசிகலா அம்மா பூட்டும், சங்கிலியும் கொடுத்து அனுப்பினாங்க. அதுக்குள்ள யாரு சீல் வச்சாங்கன்று தெரியல. பொதுச் செயலாளர் சசிகலா அம்மாதானே. ஒரே குழப்பமா இருக்குது. ‘நம்ம கட்சிடா, நான்தான் பொதுச் செயலாளர். நீ தொண்டன்தான்டா. எனக்கு 52 வயதாகுது. நீ அதிமுக உறுப்பினர்தான்டா, நீ சீல் வைடா’ன்னு சொல்லி சசிகலா அம்மா அனுப்பினாங்க. இங்க வந்து பார்த்தா, யாரோ எனக்கு முன்னாடி சீல் வச்சிட்டு போயிருக்காங்க. ஒன்னுமே புரிய மாட்டேங்குது. பைத்தியமே புடிக்கறாமாதிரி இருக்கிறது” என்கிறார்.

நல்ல வேலை எம்ஜிஆர்தான் பொதுச் செயலாளர்னு சொல்லாமல் விட்டாரே. எப்போதுதான் அந்த அதிமுக தொண்டர்களுக்குத் தெளிவு ஏற்படும் என நெட்டிசன்கள் வறுத்தெடுக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in