
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிறந்தநாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவருக்கு பல்வேறு அரசியல், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ”நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், அன்பு சகோதரர், சீமான் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சீமான் அவர்களின் பொதுவாழ்வு சிறந்து நீடூழி வாழ உளமாற வாழ்த்துகிறேன். “ என பதிவிட்டுள்ளார்.
இதே போல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் சீமான் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணிகளை தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
இதே போல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாமக தலைவர் ஜி.கே.மணி, இயக்குனர் பாரதிராஜா, நடிகர் விஜய் ஆகியோரும் சீமானுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!
அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!
80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… விஞ்ஞானிகள் சாதனை!
தேனியில் பரபரப்பு.. கவுன்சிலர்களின் பிச்சை எடுத்து போராட்டம்!
பிக் பாஸ் நிக்சனின் சில்மிஷ வீடியோ... போட்டியாளர்கள் அதிர்ச்சி!