அதிமுக
அதிமுக 'அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம், ஆனால்...' - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

'அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம், ஆனால்...' - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் முடிவுகளை அறிவிக்க வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கேட்டு ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், "அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் முடிவுகளை அறிவிக்க வேண்டாம். ஒரேயொரு வேட்புமனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட காரணத்தால் இத்தகைய பரிந்துரையை அளிக்கிறோம் . ஏப்ரல் 11ம் ஒத்திவைக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான பழைய வழக்கை முன்கூட்டியே மார்ச் 22ம் தேதி விசாரிக்கப்பட்டு, மார்ச் 24ம் தேதி தீர்ப்பளிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஆலங்குளம் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இரட்டை தலைமையை ஒழித்து ஒற்றைத் தலைமை உருவாக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக்கோரிய உரிமையியல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பொது செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டுமென மனோஜ் பாண்டியன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.

இந்த அவசர முறையீட்டை ஏற்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, இந்த அவசர மனுவை நீதிபதி கே.குமரேஷ்பாபு நாளை விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். இதன்படி மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்துள்ள மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்பாக இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் தங்களின் வாதங்களை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து தீர்ப்பு வெளியானது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in