ஆன்லைனில் அதிமுக பொதுக்குழு: கரோனா அதிகரிப்பால் மாற்று திட்டம்

ஆன்லைனில் அதிமுக பொதுக்குழு: கரோனா அதிகரிப்பால் மாற்று திட்டம்

கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் நடத்த தலைமைக் கழக நிர்வாகிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒற்றைத்தலைமை என்ற முழக்கத்துடன் கடந்த ஜூன் 23-ம் தேதிி சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. ஆனால், ஒற்றைத்தலைமைக்கான முடிவு இக்கூட்டத்தில் எடுக்க முடியவில்லை. இந்த நிலையில் ஜூலை 11-ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைத்துப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டத்தில் பொதுக்குழுவை நடத்த ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கரோனா தினசரி பாதிப்பு 2500 என்ற எண்ணிக்கையைக் கடந்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி வருகிறது. இதனால், அதிமுக பொதுக்குழுவை நடத்த அக்கட்சியின் தலைமைக்கழக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடியாகவே பொதுக்குழுவை நடத்த முடிவெடுக்கப்பட்டிருந்தாலும், கரோனா அனுமதியைக் காட்டி அனுமதி வழங்கப்படாவிட்டால், ஆன்லைன் மூலம் கூட்டத்தை நடத்த தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில்," அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்றும், 11-ம் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக்கப்படுவார்" என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in