`ஓபிஎஸ், சசிகலா, தினகரன் திக்குத் தெரியாத காட்டில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்’- ஜெயக்குமார் கிண்டல்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்’ஓபிஎஸ், சசிகலா, தினகரன் திக்குத் தெரியாத காட்டில் அலைந்து கொண்டி இருக்கிறார்கள்’ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

``ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் திக்குத் தெரியாத காட்டில் அலைந்து கொண்டி இருக்கின்றனர்'' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் தினத்தை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் பேரணியாக சென்று மொழி தியாகிகள் திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ‘’ 1967-ம் ஆண்டுகளில் எம்ஜிஆர், அறிஞர் அண்ணா போன்றவர்கள் இந்தி திணிப்பு ஆதிக்கம் அதிகமாக இருந்த நிலையில் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் பார்த்துக் கொண்டனர். மேலும் பேரறிஞர் அண்ணா தமிழுக்காகவே வாழ்ந்து வந்தவர். மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர். எங்கள் ரத்தத்தில் தமிழ் ஊறியுள்ளது. தமிழை அழிக்கும் விதமாக தற்போது ஆளும் திமுக அரசு செயல்படுகிறது.

அவ்வப்போது சசிகலா மீண்டும் அதிமுக என் வசம் என கூறி தலைமறைவு ஆகி கொள்வார். திக்கு தெரியாத காட்டில் சிக்கி தவிப்பது போல் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகிய மூவரும் இருந்து வருகின்றனர்.

திமுக அமைச்சர்கள் எல்லாம் ரவுடிகளை போல் கற்களை கையில் எடுத்துக் கொண்டு அராஜக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலாவை வைத்து திமுக வெற்றி பெற கனவு காண்கிறது ’’ என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in