ஆர்ப்பாட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த அதிமுக மாவட்டச் செயலாளர்: மருத்துவமனையில் அனுமதி

ஆர்ப்பாட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த அதிமுக மாவட்டச் செயலாளர்: மருத்துவமனையில் அனுமதி

மின் உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த காஞ்சிபுரம் அதிமுக மாவட்டச் செயலாளர் மயங்கி விழுந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் காவலன் கேட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளருமான சோமசுந்தரம் கலந்து கொண்டார். அவருடன் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அப்போது திமுக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

கண்டன ஆர்ப்பாட்டம் முடிந்த நிலையில் மேடையை விட்டுக் கீழிறங்கிய சோமசுந்தரம் மயங்கி விழுந்தார். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு கிளம்பியது. மயங்கி விழுந்த சோமசுந்தரத்தை அக்கட்சியினர் மேடைக்குப் பின்புறம் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் காஞ்சிபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோமசுந்தரம் தற்போது நலமுடன் உள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in