அமித் ஷா சந்திப்பைத் தொடர்ந்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்... நாளை நடைபெறுகிறது!

அதிமுக தலைமையகம்
அதிமுக தலைமையகம்

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற அதிமுகவின் அறிவிப்பு  மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் பரபரப்பான சம்பவங்களுக்கிடையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை(செப்.25) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் அண்ணா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்தை அடுத்து அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அதிமுக, பாஜக இருதரப்பினரும் வார்த்தைகளால் கடுமையாக மோதிக் கொண்டனர்.

இதனை மேலும் தொடர வேண்டாம் என்று நினைத்த அதிமுக, முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை  டெல்லிக்கு அனுப்பியது. அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்ட அவர்களுக்கு நேரம் மறுக்கப்பட்ட நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து திரும்பினர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நீக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பாஜக மேலிடம் அதனை ஏற்கவில்லை. இதனால் அதிமுக நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினர். இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை மாலையில்  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மாலை 4 மணிக்கு, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வரும் நிலையில், நாளை நடைபெறும்  கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணி குறித்து அதிமுக முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in