நட்டா வரும் நாளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: என்ன சொல்கிறார் அண்ணாமலை?

நட்டா வரும் நாளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: என்ன சொல்கிறார் அண்ணாமலை?

பாஜக தேசிய தலைவர் நட்டா தமிழகம் வருகை தரும் நாளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், மேலிட பார்வையாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் இன்று சாமி தரிசனம் செய்தனர்.

இதன் பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாஜக தேசிய தலைவர் நட்டா கோவை, நீலகிரி பாராளுமன்ற தொகுதி கட்சி நிகழ்வில் இன்று பங்கேற்கிறார். டெல்லியில் காலநிலை மோசமான காலநிலை காரணத்தால் நட்டா விமானம் தாமதமாகியுள்ளது. அதனால் இப்போதைக்கு அவர் சார்பில் நாங்கள் வந்துள்ளோம். தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். இந்திய மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கோயிலில் பிரார்த்தனை மேற்கொண்டோம். ஆகம விதிப்படி கோயில் நடை சாத்தவேண்டும் என்பதற்காக விரைவாக வந்து பூஜையில் பங்கேற்றோம்.

அதிமுகவைப் பொறுத்த வரை அவர்கள் ஏற்கெனவே தேதியை அறிவித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை இன்று நடத்துகின்றனர். இதன் காரணமாகத்தான் அவர்கள் எங்களது தேசிய தலைவரை சந்திக்க வரவில்லை.

பாஜகவை பொறுத்த வரை தேசிய தலைவர் இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்காக சுற்றுபயணத்தை நடத்துகிறார். குறிப்பாக தமிழகத்தில் கோவையில் இருந்து அவர் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்பதற்காக மூன்று நாட்களுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. இதை முடித்து விட்டு தேசிய தலைவர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் செல்கிறார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் கவனம் செலுத்தி வருகிறார்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in