ஆ.ராசாவின் காரை வழிமறித்து ‘இரட்டை இலை’க்கு வாக்கு கேட்ட அதிமுகவினர்... நீலகிரியில் பரபரப்பு!

திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் காரை வழிமறித்து வாக்கு சேகரித்த அதிமுகவினர்
திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் காரை வழிமறித்து வாக்கு சேகரித்த அதிமுகவினர்

கோவையில் சாலையில் நின்று வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த அதிமுகவினர், அவ்வழியே வந்த திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் காரையும் நிறுத்தி இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு கை கொடுத்து ஆ.ராசா வாழ்த்து தெரிவித்தார்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், பாஜக சார்பில் எல். முருகனும், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினரும் தொண்டர்களும் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகை சாலையில் உள்ள கொத்துவா பள்ளிவாசலில் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

அதிமுகவினருடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்த ஆ.ராசா
அதிமுகவினருடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்த ஆ.ராசா

தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனுக்கு ஆதரவாக அக்கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் கார் வந்தது. அப்போது அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் அந்த காரை வழிமறித்து ”போடுங்கம்மா ஓட்டு. இரட்டை இலையை பார்த்து” என முழக்கமிட்டனர். இதனைக் கண்ட ஆ.ராசா வாகனத்தை நிறுத்தி அதிமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

அதிமுகவினர் வழங்கிய துண்டு பிரசுரங்களையும் மறுக்காமல் ஆ.ராசா வாங்கிக்கொண்டார்
அதிமுகவினர் வழங்கிய துண்டு பிரசுரங்களையும் மறுக்காமல் ஆ.ராசா வாங்கிக்கொண்டார்

அப்போது அவரிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என அதிமுகவினர் கேட்டதால், சிரித்தபடியே ஆ.ராசா அங்கிருந்து கிளம்பிச் சென்றார். மேலும் அவர்கள் வழங்கிய துண்டு பிரசுரங்களையும் மறுக்காமல் பெற்றுக்கொண்டார். இதனிடையே ஆ.ராசா பேசிக் கொண்டிருக்கும் போது. திமுக தொண்டர் ஒருவர் அதிமுகவினர் முழக்கம் எழுப்பிய போது எதிர் முழக்கம் எழுப்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இருப்பினும் இரு தரப்பும் அமைதியாக தங்களது வாக்கு சேகரிக்கும் பணிகளை தொடர்ந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...   

பிரபுதேவா பாட்டுக்கு நடனமாடி அசத்திய ராஜமெளலி...வைரலாகும் வீடியோ!

வைகோ மருமகன் பாஜகவில் இணைந்தார்... மதிமுகவினர் அதிர்ச்சி!

6 நிமிஷ வீடியோவுக்கு ரூ.60 கோடி செலவு... மாஸ் காட்டும் ‘புஷ்பா2’

அந்தரங்க வீடியோ வெளியாகி அதிர விட்ட நடிகை.... பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு!

குடிபோதையில் ஓட்டுநர்... பள்ளிப் பேருந்து கவிழ்ந்து 5 மாணவர்கள் உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in