தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ், எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் ஓபிஎஸ்: அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்!

தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ், எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் ஓபிஎஸ்: அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்!

அதிமுக 51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பழனிசாமி ஆகியோர் சென்னையில் தனித்தனியே கட்சிக் கொடி ஏற்றியிருக்கிறார்கள்.

அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு விழா மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழா இன்று அக்கட்சியின் சார்பில் கொண்டாடப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, அங்கிருக்கும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்துகிறார். அவரை வரவேற்கத் தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அதிமுக எல்எல்ஏக்கக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது துணைத்தலைவர் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்விற்கு பிறகே சட்டப் பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு செய்வார்களா என்பது தெரியவரும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். அவருடன் மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாககர், புகழேந்தி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவை முடித்துக் கொண்டு சட்டப்பேரவை கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். 50-வது ஆண்டு தொடக்க விழாவின் போது இதே எம்ஜிஆர் இல்லத்தில் பொதுச்செயலாளர் எனத் தன்னைக் குறிப்பிட்டு சசிகலா கல்வெட்டு ஒன்றை திறந்துவைத்தார். அதேபோல் இன்று தன்னை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு கல்வெட்டை திறந்து வைத்துள்ளார் ஓபிஎஸ்.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in