ஏழைகளின் எதிர்காலத்தை அழிக்கும் அதானி குழும நிறுவனங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்: ஜோதிமணி எம்.பி

ஜோதிமணி எம்.பி
ஜோதிமணி எம்.பிஏழைகளின் எதிர்காலத்தை அழிக்கும் அதானி குழுமம் குறித்து விவாதிக்க வேண்டும்: ஜோதிமணி எம்.பி

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி  ஏழை, நடுத்தர மக்களின் எதிர்காலத்தை அழிக்கும், அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுகள் தொடர்பாக விவாதிக்கக் கேட்டு மக்களவையில் இன்று ஒத்தி வைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சந்தை இழப்பை சந்தித்துள்ள அதானி குழும நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் பங்குகளின் வீழ்ச்சி  குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு அல்லது உச்ச நீதிமன்றம் தலைமையிலான விசாரணை நடத்தப்படுவது மிகவும் முக்கியமானது.  

இது நாட்டின் நிதி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துகிறது.  துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள், மின்சாரம் போன்ற முக்கியமான துறைகள் உட்பட முக்கிய துறைகளில் பரிவர்த்தனைகளைக் கொண்ட குழுமமானது, அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும் விதிகளால் பெருமளவில் பயனடைந்துள்ளது. இதனால்  நமது பொதுத்துறை வங்கிகளும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை கடன் வழங்கும் பாரத ஸ்டேட் வங்கி ரூ. 21,000 கோடி.  பஞ்சாப் நேஷனல் வங்கி சுமார் ரூ. 7,000 கோடி.  2.9 கோடி பாலிசிதாரர்களுடன், LIC (Life Insurance Corporation of India) மொத்தமாக அதானி குழும நிறுவனங்களில் 35,000 கோடி ரூபாய்.  இவை அனைத்தும் எளிய முதலீட்டாளர்கள் மற்றும் வரி செலுத்துவோரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மக்களைவை விவாதிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்று  தெரிவித்தார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in