தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் ஆதித்ய தாக்கரே திடீர் சந்திப்பு

முதல்வர் ஸ்டாலினுடன் ஆதித்ய தாக்கரே சந்திப்பு
முதல்வர் ஸ்டாலினுடன் ஆதித்ய தாக்கரே சந்திப்புதமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் ஆதித்ய தாக்கரே திடீர் சந்திப்பு

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சென்னையில் மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே இன்று சந்தித்து ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவைத் தோற்கடிக்க எதிர்கட்சிகள் ஓர் அணியில் திட்டமிட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா, திடீரென காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தது.

இந்த நிலையில், பாஜகவினரின் தூண்டுதலால் சிவசேனா கட்சியினர் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதால், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி மகாராஷ்டிராவில் கவிழ்ந்தது. இதையடுத்து பாஜக ஆதரவுடன் சிவசேனா அதிருப்தியாளர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தற்போது ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்த அவரது மகன் ஆதித்ய தாக்கரே சென்னைக்கு இன்று வந்தார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் அவர் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது ஆதித்ய தாக்கரேவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் அனில் தேசாய், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் உடனிருந்தனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் ஆதித்ய தாக்கரே நடத்திய பேச்சுவார்த்தை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in