ஹிண்டன்பர்க் தொடர்பாக விசாரித்தால் மோடிஜிதான் கீழே இறங்குவார், அதானி அல்ல: கேஜ்ரிவால் கடும் தாக்கு

அதானி விமானத்தில் மோடி
அதானி விமானத்தில் மோடிஹிண்டன்பர்க் தொடர்பாக விசாரித்தால் மோடிஜிதான் கீழே இறங்குவார், அதானி அல்ல: கேஜ்ரிவால் கடும் தாக்கு

அதானி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடும் தாக்குதலை முன்வைத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவையில் இன்று பேசிய அவர், “ ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக அமலாக்கத்துறை அல்லது சிபிஐ விசாரணை நடந்தால் மோடிஜிதான் கீழே இறங்குவார், அதானி அல்ல” என தெரிவித்தார்.

டெல்லி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், " ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைத்தால், அதானி மூழ்க மாட்டார், மோடிதான் மூழ்குவார். அதனால்தான் இவ்வளவு பெரிய நெருக்கடியிலும் அவர் அதானியைக் காப்பாற்றுகிறார். நரேந்திர மோடி தனது குடும்பத்திற்காக எதுவும் செய்யவில்லை, ஆனால் தனது நண்பருக்காக இவ்வளவு செய்கிறார். மோடி ஒரு சுயநலவாதி, அவர் நினைத்தால் இரண்டே நிமிடத்தில் அதானியை ஓரங்கட்டிவிடுவார். இதில் அதானி முன்னிறுத்தப்படுகிறார் அவ்வளவுதான், மற்றபடி மோடியின் பணம்தான் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. அதானி மோடியின் மேலாளர் மட்டுமே, அவர் 10-15% பெறுகிறார், மீதி மோடிஜிக்கு சொந்தமானது" என்று கூறினார்

442 மில்லியன் டாலர் மதிப்பிலான காற்றாலை மின் திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்க பிரதமர் மோடி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், “காற்றாலைத் திட்டத்தை அதானியிடம் கொடுக்க மோடிஜி இலங்கையை வற்புறுத்தினார். தொழில்நுட்ப ரீதியாக அந்த திட்டம் அதானிக்கு கொடுக்கப்படவில்லை, பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்டது. இதுபற்றி இலங்கை நாடாளுமன்றத்தில் கோத்தபய ராஜபக்சேவிடம் கேட்டபோது, அவர் அழுத்தத்தில் கொடுத்ததாக கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆறு விமான நிலையங்கள் ஏலம் விடப்பட்டன. கடைசி நேரத்தில் நிபந்தனைகள் நீக்கப்பட்டு, ஆறு விமான நிலையங்கள் அதானிக்கு வழங்கப்பட்டது. அதனை அதானிக்கு அல்ல, மோடி தனக்குத்தானே வழங்கினார். தற்போது விமான நிலையத்தின் 30 சதவீத வணிகம் மோடிஜியிடம் உள்ளது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in