சீமான் மீதான புகாரை வாபஸ் வாங்க ரூ.50,000 கொடுத்தார்கள்! போட்டுடைத்த நடிகை விஜயலட்சுமி

சீமான்- நடிகை விஜயலட்சுமி
சீமான்- நடிகை விஜயலட்சுமி

"நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை வாபஸ் வாங்க ரூ.50 ஆயிரம் வங்கிக் கணக்கில் போட்டார்கள்" என்ற அதிர்ச்சி தகவலை நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 10ம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த 12ம் தேதி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது, சீமானின் வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதையடுத்து, சீமானுக்கு 2வது முறையாக போலீஸார் சம்மன் அனுப்பினர்.

மனைவியுடன் சீமான்
மனைவியுடன் சீமான்

இந்தநிலையில், திடீர் திருப்பமாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி. "வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை" நடிகை விஜயலட்சுமி கூறினார்.

இந்தநிலையில், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தனது மனைவி கயல்விழியுடன் சீமான் இன்று ஆஜரானார். அவரிடம் காவல்துறையினர் ஒரு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "விசாரணையில் காவல்துறையினர் எந்த கேள்வியும் கேட்கவில்லை. 20 லட்சம் பணம் கொடுத்தார்களா? 30 லட்சம் மதிப்புள்ள நகை கொடுத்தார்களா என்று கேட்டார்கள். ஒன்றும் கொடுக்கவில்லை என்றேன். இதெல்லாம் சும்மா என்று சொன்னேன். என் மீது குற்றம்சாட்டியவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும்" என்றார்.

நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி

இதனிடையே நடிகை விஜயலட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “சீமான் மீது கூறிய புகார்களை நிரூபிப்பேன். வீரலட்சுமியின் வீட்டிலிருந்து நான் வெளியேறிய போது சாட்டை துரைமுருகனிடம் பேசினேன். புகாரை வாபஸ் வாங்க ரூ.50 ஆயிரம் வங்கிக் கணக்கில் போட்டார்கள். பாலசுப்பிரமணியன் என்ற வழக்கறிஞரை அனுப்பி வைத்தார் சாட்டை துரைமுருகன். புகாரை வாபஸ் பெற்றுவிட்டு எனது அக்காவுடன் கிளம்பி போக சொன்னார்கள். சாட்டை துரைமுருகனிடம் உள்ள செல்போன் உரையாடல் விவரங்களை எடுத்தாலே சீமான் என்னிடம் பேசியது தெரியும். நான் ஏதோ பொய் சொல்லும் பெண்ணாக சீமான் சித்தரிக்க முயன்றால் இந்த மோதல் முடிவுக்கே வராது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in