
’’கன்னட நடிகரும், எம்.பி.யுமான ஜக்கேஷுடன் தன்னை இணைத்து பேசுவதை சீமான் நிறுத்த வேண்டும். இல்லையென்றால் கர்நாடக நீதிமன்றத்தில் 20 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடருவேன்’’ என நடிகை விஜயலட்சுமி சீமானை எச்சரித்துள்ளார்
சீமான் மீதான புகாரை திரும்பப் பெற்றுவிட்டு, ‘இனி நான் சென்னை பக்கமே வரமாட்டேன்’ என கூறி நடிகை விஜயலட்சுமி பெங்களூர் சென்ற நிலையில், மீண்டும் வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கூட்டியுள்ளார்.
அந்த வீடியோவில், ’’ஒரு கோடி ரூபாய் மான நஷ்டம் கேட்டு சீமான் வழக்குப் போட்டதில் இருந்து விஜயலட்சுமி கதறிக் கொண்டிருக்கிறார்” என சீமான் ஆதரவு யூடியூப் சேனல்ஸ் போட்டு இருக்கிறார்கள்.
சீமானுக்கும் நன்றி கிடையாது, சீமான் ஆதரவு யூடியூப் சேனல்களுக்கும் நன்றி கிடையாது. 2008 ம் ஆண்டு எங்க அக்காவுக்கும், அவர் கணவருக்கு இடையில் நடந்த பிரச்சினையில் உதவுமாறு சீமானிடம் கேட்டேன். ஆனால் அதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் சீமான் எடுக்கவில்லை. எங்க அக்காவை பார்த்தும் சீமானுக்கு கருணைக் கிடையாது. என்னை பார்த்தும் அவருக்கு கருணை கிடையாது.
என்னை இரவோடு இரவாக தூக்கி பெங்களூரில் போட்டாச்சு. இனி என்னை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். சீமானோ அல்லது நாம் தமிழர் கட்சியினரோ வரப் போவதில்லை. எல்லாவற்றையும் முடித்துக் கொடுத்துவிட்டு, உங்க முகங்களில் முழிக்கக் கூடாது என நான் அடுத்த வேலைக்கு போயாச்சு. இதோட எல்லாவற்றையும் நிப்பாட்டிக்கிட்டா உங்களுக்கு நல்லது.
இல்லை... ஒரு கோடிக்கு மான நஷ்ட வழக்கு போட்டு இருக்கோம் வா... என கூப்பிட்டீங்கன்னா, ஜக்கேஷ் என்ற கர்நாடக நடிகருடன் எனக்கு திருமணமாகிவிட்டதாக சீமான் கூறியுள்ளார். இதற்காக கர்நாடக நீதிமன்றத்தில் 20 கோடி ரூபாய் கேட்டு நான் மான நஷ்ட வழக்குப் போடுவேன்.
கர்நாடகாவில் வந்து சீமான், ஜக்கேஷ் - விஜயலட்சுமியைத் திருமணம் செய்து கொண்டார் என சொன்னால் கர்நாடக மக்கள் சீமானை செருப்பைக் கழட்டி அடிப்பார்கள். அதனால் இதோட எல்லாவற்றையும் சீமானும் அவரது தம்பிகளும் நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று பேசியுள்ளார்.