நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும்... நடிகை ரோகிணி பிரசாரம்!

மதுரையில் நடிகை ரோகிணி பிரசாரம்
மதுரையில் நடிகை ரோகிணி பிரசாரம்

நாட்டில் ஜனநாயகத்தையும், மதச்சார்பற்ற தன்மையையும் உறுதிப்படுத்த இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளரும், நடிகையுமான ரோகிணி கூறினார்.

மதுரையில் நடிகை ரோகிணி பிரசாரம்
மதுரையில் நடிகை ரோகிணி பிரசாரம்

மதுரை மக்களவை தொகுதியின் வேட்பாளராக திமுக கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். கடந்த முறை இதே தொகுதியில் நின்று வெற்றி பெற்ற சு.வெங்கடேசனை ஆதரித்து திமுக கூட்டணி கட்சியினர் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

அதன்படி சமூக செயற்பாட்டாளரும், நடிகையுமான ரோகிணி, தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் தெற்குவாசல் மார்க்கெட், மகபூப்பாளையம், தாகூர்நகர், பரவை உள்ளிட்ட பகுதிகளில் வாக்குசேகரித்தார். இன்று அவர் வண்டியூர், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

அவர் பிரசாரக் கூட்டங்களில் பேசுகையில்," மதுரை மக்களுக்காக கடந்த 5 ஆண்டுகளாக 150-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை சு.வெங்கடேசன் நிறைவேற்றியிருக்கிறார். முதல் 2 ஆண்டுகள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது ஆக்சிஜன் கிடைக்க அவர் செய்த பணி பாராட்டப்பட்டது. அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்க வெங்கடேசன் செய்த செயல், தமிழகம் முழுவதும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. களப்பணியாளர்களுக்கு சேரவேண்டிய ஊதியத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.

மதுரையில் நடிகை ரோகிணி பிரசாரம்
மதுரையில் நடிகை ரோகிணி பிரசாரம்

நீராதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கடந்த முறை அவரிடம் கோரிக்கை வைத்தேன். அதன்படி மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை சென்னை மெரினா பீச் போல மாற்றியுள்ளார். அத்துடன் ஒவ்வொரு பகுதி மக்களையும் நேரடியாகச் சென்று அவர்களுக்குத் தேவையானதைக் கேட்டு செய்து தருகிறார். அதற்கு அதிகாரிகளையும் உடன் அழைத்துச் செல்கிறார். எனவே, எளிய மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்றால் கம்யூனிஸ்டுகளின பலம் அதிகரிக்க வேண்டும். அதன்படி மதுரை வாக்காளர்கள் சு.வெங்கடேசனை மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

பிரதமர் மோடிக்கு பாஜக 400 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருப்பதை சொல்லியுள்ளார். ஆனால், மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நாடு அச்சுறுத்தலை சந்திக்கும் நிலையில் தற்போதைய தேர்தல் மிக முக்கியமானது. நாட்டில் ஜனநாயகத்தையும், மதச்சார்பற்ற தன்மையையும் உறுதிப்படுத்த இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.

தமிழகம் மழை, வெள்ளத்தால் பாதித்தபோது வராதவர், அதற்காக ஒரு பைசா நிதி கூட வழங்காத பிரதமர் மோடி, தற்போது தேர்தல் காலம் என்பதால் தமிழகத்துக்கு வாக்கு கேட்டு மட்டுமே வருகிறார். பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். மக்கள் தெளிவாக இருப்பதால் அதற்கு பாடம் புகட்டுவர். தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்

மதுரையில் நடிகை ரோகிணி பிரசாரம்
மதுரையில் நடிகை ரோகிணி பிரசாரம்

தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்போக்குடன் பிரதமர் மோடி அணுகுகிறார். தமிழகத்துக்கு எதுவுமே செய்யக் கூடாது என்ற முடிவோடு இருக்கிறார். பாஜக தேர்தல் பத்திரம் மூலம் பல ஆயிரம் கோடி நிதி திரட்டி ஊழல் செய்துள்ளனர். நீதிமன்றம் சொன்ன பிறகுதான் அந்த விவரத்தையே வெளியிட்டு விட்டு அதை தனது சாதனை போல பாஜக கூறுகிறது. டெல்லியில் போராடிய விவசாயிகளை கொடூரமாக அடக்கிய பாஜக மீண்டும் வெற்றி பெறக்கூடாது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in