எங்க அம்மா திறமைசாலி, சூப்பர் பெண்மணி... வீடியோ மூலம் அம்மாவுக்கு வாக்குக் கேட்கும் ராதிகா மகன்!

தாய் ராதிகா, தந்தை சரத்குமாருடன் ராகுல்
தாய் ராதிகா, தந்தை சரத்குமாருடன் ராகுல்

வெளிநாட்டில் படித்து வரும் நடிகை ராதிகா சரத்குமாரின் மகன், தேர்தலில் போட்டியிடும் தனது அம்மாவுக்காக வாக்குக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராகுல்
ராகுல்

பாஜக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்காக கணவர் சரத்குமார் உள்ளிட்டவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். அதுபோல அங்கு ஏற்கெனவே வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதனால் விருதுநகர் தொகுதி ஸ்டார் தொகுதியாக விளங்கி வருகிறது.

இந்தநிலையில்,  ராதிகா சரத்குமாரின்  மகன் ராகுல் ராதிகாவுக்கு ஆதரவாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், "வணக்கம் என்னுடைய பெயர் ராகுல் சரத்குமார். எங்க அம்மா ராதிகா சரத்குமார் இந்த முறை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேர்தல் போட்டியில் நிற்கிறார். எங்க அம்மா ஒரு மிகப்பெரிய திறமைசாலி, சூப்பர் பெண்மணி. அவங்க, மக்களுக்கு என்னென்ன ஆசை இருக்கிறதோ அதை நேர்மையா செய்யணும்னு நினைப்பாங்க.

இதை நான் விருதுநகர் தொகுதிக்கு வந்து சொல்லணும்னு ஆசைப்பட்டேன். ஆனால், எனக்கு கல்லூரி பரீட்சை இருப்பதால் என்னால் வரமுடியல. எங்க அம்மா மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. நீங்களும் எங்க அம்மா மேலயும் தாமரை சின்னத்தின் மேலும் நம்பிக்கை வைத்து ஓட்டுப்போட அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று அம்மாவுக்காக வாக்குக் கேட்டு இருக்கிறார். முதல் முறையாக தன்னுடைய அம்மாவுக்காக ராகுல் வீடியோ வெளியிட்டு இருக்கும் நிலையில் இது அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்  விஜய பிரபாகரனுக்காக அவருடைய தம்பி சண்முக பாண்டியன் விருதுநகர் தொகுதியில் களத்தில் இறங்கி வாக்குச் சேகரித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ராதிகாவுக்காக அவருடைய மகன் நேரில் வர இயலாததால் எடுத்திருக்கும் இந்த முயற்சியும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!

தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in