எனது தலைவர் மோடியின் ஆசியோடு பொறுப்பை ஏற்கிறேன்: நடிகை குஷ்பு ட்விட்

பொறுப்பேற்றுக் கொண்ட நடிகை குஷ்பு
பொறுப்பேற்றுக் கொண்ட நடிகை குஷ்புஎனது தலைவர் மோடியின் ஆசியோடு பொறுப்பை ஏற்கிறேன்: நடிகை குஷ்பு ட்விட்

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

1989-ம் ஆண்டு தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய மொழிப்படங்களில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை குஷ்பு. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், கார்த்திக், ராமராஜன் உள்பட அனைவருடன் இணைந்து நடித்த அவர் கடந்த 2010-ம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதன் பின் 2014-ம் ஆண்டு திமுவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சி தலைவர்சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியில் இணைந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக குஷ்பு நியமிக்கப்பட்டார்.

பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த குஷ்பு, திடீரென 2020 அக்டோபர் மாதம் காங்கிரஸில் இருந்து ராஜினமா செய்தவுடன், பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் பாஜக வேட்பாளராக குஷ்பு நிறுத்தப்பட்டார். ஆனால், திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனிடம் 32,200 வாக்குகள் வித்தியாசத்தில் குஷ்பு தால்வியடைந்தார்.

இந்த நிலையில், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்த குஷ்புவை, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் நேற்று நியமித்தது. இதன்படி மம்தா குமாரி, டெலினா கோங்தூப் மற்றும் குஷ்பு ஆகியோர், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நடிகை குஷ்பு.
நடிகை குஷ்பு.எனது தலைவர் மோடியின் ஆசியோடு பொறுப்பை ஏற்கிறேன்: நடிகை குஷ்பு ட்விட்

இந்நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் மூன்று ஆண்டுகள் வரை இப்பொறுப்பில் இருப்பார் என்று கூறப்படுகிறது. பதவியேற்றதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், " எனது தலைவர் மோடியின் ஆசியோடு இந்த பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்" என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in