`இவர்கள் செய்யும் அட்டூழியம்தான் திராவிட மாடலா?’- ஆர்ப்பாட்டத்தில் திமுகவிற்கு எதிராகக் கொந்தளித்த குஷ்பு!

`இவர்கள் செய்யும் அட்டூழியம்தான் திராவிட மாடலா?’- ஆர்ப்பாட்டத்தில் திமுகவிற்கு எதிராகக் கொந்தளித்த குஷ்பு!

ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் குஷ்பு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அப்போது பேசிய குஷ்பு, “ திமுகவில் உள்ளவர்கள் இங்குள்ள பெண்களை அவதூறாகப் பேசும் போது, கட்சியின் தலைவராக அதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என ஒரு வார்த்தை கூட முதல்வர் ஸ்டாலின் சொல்லவில்லை. ஆட்சிக்கு வந்துவிட்டோம், அடுத்த ஐந்து வருடத்திற்கு நாம்தான் ஆட்சி செய்யப் போகிறோம் என நினைக்கிறார்கள். ஐந்து வருடத்திற்குப் பிறகு அவர்கள் ஆட்சியில் இருக்கப் போவதில்லை என அவர்களுக்கு தெளிவாக தெரியும். எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிக்கலாம் என நினைக்கிறார்கள்.

மக்கள் பற்றியோ, இந்த மண்ணை பற்றியோ அவர்களுக்கு அக்கறை கிடையாது. எதற்கெடுத்தாலும் திராவிட மாடல், திராவிட மாடல் எனச் சொல்கிறார்கள். பெண்களை இழிவு படுத்துவது, மக்களை அவதியில் விடுவது, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு இதெல்லாம்தான் திராவிட மாடலா? யார் காதில் பூ சுற்றுகிறார்கள்? நம்முடைய பிரதமரும், மாநிலத் தலைவர்களும் எங்கே சென்றாலும் தமிழ் பற்றிப் பேசுகிறார்கள். அத்தகைய திராவிட மாடல் தமிழ்நாட்டுக்கு வேண்டாம். இந்தி எதிர்ப்பு எனச் சொல்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் இந்தி பேசுவதில்லையா? இந்தி பள்ளிக் கூடம் நடத்துவதில்லையா? இவர்கள் செய்யும் அட்டூழியம்தான் திராவிட மாடலா?” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in