மதுரை வளர வேண்டுமென்றால் இவருக்கு வாக்களியுங்கள்... ரூட்டை மாற்றிய நடிகை கஸ்தூரி!

நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவரான  கஸ்தூரி, மதுரை பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி

நடிகையும் , சமூக செயற்பாட்டாளருமான கஸ்தூரி பெண்ணுரிமை மற்றும் மனித உரிமைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார். அரசியல் விமர்சகர் என்ற பெயரில் தொலைக்காட்சி விவாதங்களிலும் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், தனக்கென்று சில விருப்பங்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும், அதுதான் கள நிலவரமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் சில நாட்கள் கழித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதனால் இவர் அதிமுகவில் இணைகிறார் என்று பேச்சு எழுந்தது. அத்துடன் சில காலம் அமைதியாக இருந்தவர் பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தார். அத்துடன் தனது சமூக வலைதள பக்கத்தில் பாஜக ஆதரவு கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். 

நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி

'பாஜக அரசு எத்தனையோ பல அற்புதமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது அதில்  மதுரைக்கு ஏதாவது ஒரு திட்டமாவது வந்து சேர்ந்து இருக்கிறதா? இல்லை அது குறித்தாவது மதுரை மக்களுக்குத் தெரியுமா? தற்போது மதுரையில் எம்.பி-யாக இருப்பவர் மக்கள் பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்தில் ஏதாவது பேசியிருக்கிறாரா? என்று கேள்விகளை எழுப்பி உள்ளார்.

'மதுரையில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பேராசிரியர் ராம சீனிவாசன் சுயநலமில்லாமல் பொதுநலத்திற்காக உழைப்பவர். அவருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.  மதுரை வளர வேண்டுமென்றால் அங்கு தாமரை மலர வேண்டும் 'என்று பேசி வாக்குக் கேட்டுள்ளார். 

முதலில் திமுக வெற்றி பெறும் என்று பேசியவர், பிறகு எடப்பாடி பழனிசாமி சந்தித்து விட்டு தற்போது பாஜகவுக்கு வாக்கு சேகரிக்கும் இவரின் நிலைப்பாடுதான் என்ன என்று புரியாமல் தமிழ்நாடு மக்கள் குழம்பிப் போயுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in