ஜடேஜாவை தமிழக பாஜக தலைவராக ஆக்கி விடலாமா?- அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் கேள்வி

ஜடேஜாவை தமிழக பாஜக தலைவராக ஆக்கி விடலாமா?- அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் கேள்வி

குஜராத்தைச் சேர்ந்த பாஜககாரரான ஜடேஜா தான்  சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் பதில் அளித்துள்ளார். 

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணி மாபெரும் வெற்றியை பெற்றது.  இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "பாஜக காரியகர்த்தரான ஜடேஜா தான் சென்னை அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார், ஜடேஜாவின் மனைவி ரிவபா குஜராத் ஜாம்நகர் வடக்கு தொகுதியின் எம்எல்ஏ ஆவார்" என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலையை விமர்சித்து பதில் அளித்துள்ளார். அவரது பதிவில், 'சிறந்த காரியகர்த்தாவாக இருப்பதற்காக ஜடேஜாவை தமிழக பாஜக மாநிலத் தலைவராக்க முடியுமா? அவரை ஆக விடுவீர்களா? ஜடேஜா திறமையால் தமிழ்நாட்டின் இதயங்களை வென்றவர், தனது அரசியலுக்காக அல்ல. 

தமிழகத்தில் வெறுப்பு அரசியல் செய்கிறீர்கள் அண்ணாமலை. உங்கள் மோட்டார் வாயை யாரும் விரும்புவதில்லை. உங்கள் முட்டாள்தனமான பேச்சுக்காக யாரையும் ஒப்பிட முடியாது.  ஜடேஜாவை தமிழ்நாட்டின் மாநிலத் தலைவராக்கினாலும், அவரை வீழ்த்துவதற்காக அண்ணாமலை ஆடியோ வீடியோவை மார்பிங் செய்த புகைப்படம் செய்வார்' என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பாஜக ஐடி விங் காயத்ரி ரகுராமை மிகக் கடுமையாக விமர்சித்து பின்னூட்டங்களை இட்டு வருகிறது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in