கொச்சையான ட்விட்டுக்கு லைக்; யார் இந்த செல்வகுமார்?- காயத்ரி ரகுராம் சொன்ன புதுத் தகவல்

கொச்சையான ட்விட்டுக்கு லைக்; யார் இந்த செல்வகுமார்?- காயத்ரி ரகுராம் சொன்ன புதுத் தகவல்

3 மாதங்களுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்த கோவை சேர்ந்த செல்வகுமார் என்பவர் குறித்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் புதுத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார் என்றும் ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென அறிவித்தார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம், பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக நான் இருக்கும்போது வெளிநாட்டில் இருந்து 28 தமிழர்களை மீட்டு கொண்டு வந்திருக்கிறேன். மியான்மர், கம்போடியா, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து தமிழர்களை மீட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட விஷயங்களை நான் எனது சொந்த செலவில் செய்து வந்திருக்கிறேன். அப்படி இருக்கும்போது பாஜகவுக்கு நான் கலங்கத்தை கொண்டு வந்தேன் என்று சொல்லும்போது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

செல்வகுமார் என்ற ஒரு நபர் மூன்று மாதத்துக்கு முன்பு கட்சியில் சேர்ந்தார். அந்த நபர் வந்த உடனேயே கட்சியில் ஒரு பெரிய பொறுப்பை வாங்கிக்கொண்டு எனக்கு எதிராக செயல்பட்டு வந்தார். எனக்கு எதிராக கொச்சையான ட்விட்டுக்கு செல்வகுமார் லைக் போடுவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்" என்றார். இது குறித்து கட்சியிடம் கூறினீர்களா? என்ற கேள்விக்கு, நான் விளக்கம் அளிப்பதற்கு முன்பே என்னை கட்சியிலிருந்து நீக்கி விட்டார்கள். இந்த சம்பவம் குறித்து கட்சியில் பேசுவதற்கு எனக்கு நேரம் கொடுத்து இருக்க வேண்டும். இது தொடர்பாக விளக்கம் அளிக்க நான் தயாராகிக் கொண்டிருந்தேன். இந்த விவகாரத்தில் எந்த விசாரணையும் நடத்தாமல் என்னை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள் என்றார்.

மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கட்சி ரீதியாக நீங்க அவரை சந்திக்கும்போது உங்களுக்கும் அவருக்குமான ரிலேஷன்ஷிப் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, அவர் எப்போதும் பிஸியாக இருப்பார். வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினால் உடனே பதில் அளிப்பார். இந்த புகாரை வாட்ஸ்அப்பில் சொன்னால் சரியாக இருக்காது. நீண்ட விளக்கத்தை நான் கொடுத்தாக வேண்டும். இது முதல் தடவையாக செல்வகுமார் இப்படி பண்ணவில்லை. இதற்கு முன்னாடியே இதேபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். அந்த தகவலை நான் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். அதை எடுத்து கொண்டு போவதற்குள்ளாக என்னை கட்சியிலிருந்து நீக்கி விட்டார்கள்" என்றார்.

ஒருதலைபட்சமாக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு, என்னிடம் விசாரணை நடத்தப்படவில்லை. என்னுடைய தரப்பு விளக்கத்தை கேட்கவில்லை என்றார். யார் இந்த செல்வக்குமார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், மூன்று மாதத்திற்கு முன்பு தான் அவர் கட்சியில் வந்து சேர்ந்தார். அவர் கோவை குரூப் ஒன்று வைத்திருக்கிறார். அவர்கள் நண்பர்களா, ஊழியர்களா? என்று சொல்ல முடியாது. நான் கேள்விப்பட்ட வரைக்கும் அவர்கள் வார் ரூம் மாதிரி ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து வந்த டார்கெட் தான் எனக்கு" என்றார். செல்வகுமார் உங்களை ஏன் டார்கெட் பண்ணுகிறார் என்ற கேள்விக்கு, என்ன என்று எனக்கு தெரியவில்லை என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in