கர்நாடகாவுக்கு உணவுப் பொருட்களை அனுப்பக்கூடாது- நடிகை கஸ்தூரி காட்டம்

நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தராத கர்நாடகாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து மின்சாரம், உணவு பொருட்களை அனுப்பக்கூடாது என நடிகை கஸ்தூரி காட்டமாக பேசியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பங்கு நீரை தராமல் கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனை கண்டிக்கும் வகையில் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பிரபலங்களும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கஸ்தூரி, கர்நாடகாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவிரி போராட்டங்கள் (கோப்பு படம்)
காவிரி போராட்டங்கள் (கோப்பு படம்)

வரலாற்றுப்படி காவிரியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு முழு உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு மட்டுமே 75% உரிமை உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், காவிரி கர்நாடகாவின் தனி சொத்து என்று அம்மாநில அரசியல் கட்சியினர் நம்ப வைத்துள்ளதாக சாடியுள்ள அவர், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தராத கர்நாடகாவிற்கு, தமிழ்நாட்டில் இருந்து மின்சாரம், உணவு பொருட்கள் ஆகியவற்றை அனுப்பக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in