பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா: சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் விஜய்!

சீமான், விஜய்
சீமான், விஜய்

சீமானின் பிறந்த நாளையொட்டி அவருக்கு நடிகர் விஜய் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளதை நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

சீமான்
சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று 57வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். சீமானுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் தொலைபேசியில் சீமானைத் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி பாக்கியராசன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை நாம் தமிழர் கட்சியினர் வைரலாக்கி வருகின்றனர்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்றுள்ள சீமான், சினிமாவில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கு, ஓர் இனத்தை வழிநடத்துவதற்கு,தலைவனாக இருப்பதற்கு தகுதியாகக் கூறுவது அவமானகரமானது என்று கடும் விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், சீமானுக்கு விஜய் பிறந்த நாள் வாழ்த்து கூறியது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in