`போதையற்ற தமிழகத்தில்’ இணைந்த நடிகர் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகர் விஜயசேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகர் விஜயசேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்’’போதையற்ற தமிழகத்தில்’’ இணைந்த நடிகர் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ்

’’போதையற்ற தமிழகம்’’ என்ற முழக்கத்தை முன்வைத்து இந்திய வாலிபர் சங்கம் நடத்தும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை ஐஸ்வர்ய ராஜேஷ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மலிவாக கிடைக்கிறது. மாநில அரசு மதுபான கடைகளை படிப்படியாக மூட வேண்டிய தேவை உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து போதைப்பபழக்கம் அதிகரித்து வருவதால் பல இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில் போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்கக் கோரி ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடங்கியுள்ளது. இந்த இயக்கத்தை விடுதலைப் போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார்.

கையெழுத்து இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், அரசியல் கட்சியினர், ஊடக பிரபலங்கள், சின்னத்திரை நடிகர்கள் உள்ளிட்டோர் கையெழுத்துட்டு வருகின்றனர். அந்தவரிசையில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in