தேசிய சின்னம் மாற்றியமைப்பு: பாஜகவை ட்விட்டரில் தெறிக்க விட்ட நடிகர் பிரகாஷ் ராஜ்!

பிரகாஷ்ராஜ்
பிரகாஷ்ராஜ்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்பரப்பில் தேசிய சின்னம் மாற்றியமைக்கப்பட்டதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்பரப்பில் பிரமாண்ட தேசிய சின்னத்தைப் பிரதமர் மோடி கடந்த திங்கள்கிழமை திறந்து வைத்தார். தேசிய சின்னம் மாற்றியமைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரின் ட்விட்டர் பதிவில், “தேசிய சின்னத்தில் உள்ள உண்மையான சிங்கங்கள் அழகாகவும், கம்பீரமாகவும் இருக்கின்றன. நாடாளுமன்றத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள மோடியின் சிங்கங்கள், உறுமிக் கொண்டு தேவையில்லாமல் ஆக்ரோஷமாகவும் சரியான அளவில் இல்லாமலும் இருக்கின்றன.” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் புதிதாக அமைக்கப்பட்ட தேசிய சின்னம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் படங்கள் மூலமாக விமர்சனம் செய்துள்ளார்.

அந்தப்படங்களில் ஒருபக்கம் ராமர் சாந்தமாக இருக்கும் படமும், அடுத்த பக்கம் கடும் கோபத்துடன் அம்பெய்யும் உக்கிரமான ராமர் படமும் உள்ளது. புதிய ராமர், அவதார் அனிமேஷன் ராமராகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். அதற்குக் கீழே சாந்தமாக அருள்பாலிக்கும் அனுமனும், தலைமுடி கலைந்து ,கண்களில் கோபம் கொப்பளிக்கும் அளவிற்கு ஆக்ரோஷமான அனுமனும் வைக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்தாற்போல், இந்தியத் தேசிய சின்னமான நான்முக சிங்கத்தில் இருக்கும் சிங்கங்கள் இயல்பாகவும், கம்பீரமாக இருக்கும் படம் உள்ளது. அதற்குப் பக்கத்தில் வேட்டைக்கு ஆயத்தமாக இருக்கும் சிங்கம் வாயைப் பிளப்பது போல உள்ள படமும் வைக்கப்பட்டுள்ளது. தனது படத்தின் மூலம் பாஜகவைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in