‘கொலைகாரன் பேச்சுக்கு செத்தவன் மட்டுமே கைத்தட்டுவான்’ -மோடிக்கு எதிராக காட்டம் காட்டும் பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ் - மோடி
பிரகாஷ் ராஜ் - மோடி

பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக பொதுவெளியில் தீவிரமாக களமாடி வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், மற்றுமொரு முறை காட்டம் காட்டியுள்ளார்.

இம்முறை மணிப்பூர் விவகாரத்தை தொட்டு, அதன் மத்தியில் பிரதமர் மோடி வலியுறுத்தும் சுதந்திர தின கொண்டாத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார் பிரகாஷ் ராஜ்.

சமூக வலைதளத்தில் தற்போது பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “மன்னிக்கவும். என்னால் உங்களது கொண்டாட்டத்தில் பங்கு கொள்ள இயலாது. வீட்டில் இறந்தவர்களை புதைக்க காத்திருக்கும் போது, கொள்ளையர்களின் ஊர்வலம் என்னுடைய வீட்டின் முற்றம் வழியாகச் செல்லும் போது, என்னால் உங்களுடைய கொண்டாட்டத்தில் ஈடுபட இயலாது.

ஒவ்வொரு வீடும் சுடுகாடாய் கிடக்கும் போது நீங்கள் கொடிகளை ஏற்ற முடியுமா? புல்டோசர்கள் தேசபக்தியைத் தூண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

மன்னிக்கவும். தேசம் அழும் போது நான் எப்படி உங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட முடியும்? ஒரு கொலைகாரனின் பேச்சுக்கு செத்தவன் தான் கைதட்டுவான். ஆனால் நான் சாகவில்லை. என்னால் உங்களது கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாது" என்று காரசாரமாய் பதிவிட்டு இருக்கிறார்.

பாஜக மற்றும் இந்துத்துவ அபிமானிகளுக்கு எதிராக நடிகர் பிரகாஷ் ராஜ் தீவிரமான கருத்துக்களை பதிவிடுவதும், அதற்கு அவர்கள் பதிலடி தருவதும் தொடர்ந்து வருகிறது. அண்மையில் கர்நாடகாவில் தனியார் கல்லூரி ஒன்றின் சிறப்பு விருந்தினராக பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டதை அடுத்து, அவரது எதிர்ப்பாளர்களான சில மாணவர்கள், அந்த அரங்கை கோமியம் தெளித்து சுத்தப்படுத்துகிறோம் என்று கிளம்பியது சர்ச்சைக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in