
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் திடீரென நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் 61 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான பணிகள் தீவிரமாக தற்போது நடந்து வருகிறது.
இந்த பாதை ஆழ்வார்பேட்டை வழியாக செல்கிறது.இதற்காக அப்பகுதியில் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளுக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் இடத்திற்காக ரயில்வே நிர்வாகம் சார்பில் கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்தமுறை மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் போது நடிகர் விஜயகாந்தின் திருமண மண்டபத்தின் சில பகுதிகள் கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு சொந்தமான அவருடைய வீட்டின் ஒரு பகுதியை மெட்ரோ நிர்வாகம் கைப்பற்ற நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.