
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.எம்.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன் ட்விட்டரில் தனது வாழ்த்துகளை பதிவு செய்திருக்கிறார்.
'முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்' என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டை அடக்கி ஆள துடிப்பவர்களின் கனவை தகர்ப்பவராகவும், முதல்வர்களில் முதன்மையானவராகவும் என்று ஸ்டாலினை கமல்ஹாசன் குறிப்பிட்டிருப்பது திமுகவினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிக கடுப்பை கிளப்பியுள்ளது.