'கமல்ஹாசன் பணத்திற்கு விலைபோயுள்ளார்’ -செல்லூரார் சொல்கிறார்!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுநடிகர் கமல்ஹாசன் பணத்திற்கு விலைபோயுள்ளார் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

’’வாக்காளர்களை கவர திமுகவினர் ஏதேதோ செய்கிறார்கள். ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசுக் கொடுப்பது போல திமுகவிற்கும் கொடுக்கலாம்’’ என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ,’’ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியை பெறும். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விரக்தியில் மக்கள் உள்ளனர். அதனால் இந்த தேர்தலில் திமுகவிற்கு மக்கள் அதிர்ச்சி வைத்தியம் அளிப்பார்கள்.

ஈரோடு கிழக்குத் தொகுதி வித்தியாசமானதாக உள்ளது. ஆராய்ச்சியாளர்களுக்கு கொடுப்பது போல திமுகவினருக்கும் நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.

வாக்காளர்களை கவர ஏதேதோ செய்கிறார்கள். திருமங்கலம், அரவக்குறிச்சி ஃபார்முலா போல ஈரோடு கிழக்கு தொகுதிக்கான ஃபார்மூலாவை கண்டுப்பிடித்துள்ளனர். ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டுபோய் அடைத்து வைப்பது போல மக்களையும் அடைத்து வைக்கிறார்கள்.

வாக்காளர்களே முகம் சுழிக்கும் வகையில் திமுக அமைச்சர்கள் பணம் கொடுக்கிறார்கள். தேர்தல் ஆணையம் திமுகவிற்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறது. நடிகர் கமல்ஹாசனிடம் கொள்கை கிடையாது. பணத்திற்கு விலைபோயுள்ளார். நடிகர் கமல்ஹாசனை அரசியல்வாதியாக நான் பார்க்கவில்லை. அவர் பேசுவதை கேட்டால் ஓட்டுப் போட வேண்டும் என நினைப்பவர் கூட ஓட்டுப் போடமாட்டார்‘’ என்று முடித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in