இப்போதைக்கு கிளைமாக்ஸை சொல்லக்கூடாது: திமுக கூட்டணி குறித்து நடிகர் கமல்ஹாசன்

கண்காட்சியைப் பார்வையிடும் நடிகர் கமல்ஹாசன்.
கண்காட்சியைப் பார்வையிடும் நடிகர் கமல்ஹாசன்.இப்போதைக்கு கிளைமாக்ஸை சொல்லக்கூடாது: திமுக கூட்டணி குறித்து நடிகர் கமல்ஹாசன்

திமுகவுடனான கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்வை விளக்கும் புகைப்பட கண்காட்சியை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார்.

'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் இந்த புகைப்படக்கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின் செய்தியாளர்களிடம் நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், " தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எனக்குமான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. அவருக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து படபிடிப்பை ஒத்திவைத்துவிட்டு வந்துள்ளேன். சவால்களைச் சந்தித்து படிப்படியாக உயர்ந்து முதலமைச்சரானவர் தான் ஸ்டாலின். தன் திறமையால் வளர்ந்தவர் அவர். தமிழர்களின் சரித்திரத்தை மாற்றி எழுத பலர் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். திமுகவுடன் கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. சீன் பை சீனாகத்தான் செல்ல வேண்டும். இப்போதே கிளைமேக்ஸ்க்குச் செல்லக் கூடாது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in