‘நற்பணி செய்தீர்கள்.. இனி நாட்டுப்பணி செய்யுங்கள்...’ ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள்!

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

"நற்பணி செய்து கொண்டிருந்தீர்கள். இனி நாட்டுப் பணி செய்யுங்கள்" என்று தனது ரசிகர்களுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்டாலின் - கமல்
ஸ்டாலின் - கமல்

இந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். இதையடுத்து, திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஈரோடு, திருச்சி தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், இன்று புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக புதுச்சேரிக்கு வந்திருந்த கமல்ஹாசனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஈரோடு பரப்புரையில் கமல்
ஈரோடு பரப்புரையில் கமல்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நானும் மக்களில் ஒருவன் என்பதால், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கிற எனது மனநிலை தான் மக்களுக்கு இருக்கும் என்று நம்புகிறேன். இப்போது நாட்டில் மாற்றம் வர வேண்டும் என்பது முக்கியம் அல்ல. நம்முடைய குடியுரிமை முதற்கொண்டு அனைத்தையும் தற்காத்துக் கொள்ளும் நேரம் இது. அதனால் தான் கட்சி என்ற வரையறை கோடு எல்லாம் கடந்து வந்து இருக்கிறேன். வெள்ள நிவாரண நிதிக்காக கூட நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது. நீதி தான் நமக்கு நாதி என்றாகி விட்டது. ஜனநாயக நாட்டில் அப்படி இருக்கக் கூடாது. ஒவ்வொரு விஷயங்களும் ஜனநாயகமாகவே நீடிக்க வேண்டும். அதற்கான முதற்கட்ட முயற்சியாக இந்த தேர்தலைப் பார்க்கிறேன். இதுவரையில் எனது ரசிகர்கள் நற்பணி செய்து கொண்டிருந்தீர்கள். இனி நாட்டுப் பணி செய்யுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in