நடிகர் சின்னி ஜெயந்த் மகன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்பு!

நடிகர் சின்னி ஜெயந்த் மகனுடன்...
நடிகர் சின்னி ஜெயந்த் மகனுடன்...

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் சின்னி ஜெயந்த். இவருடைய மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில் அதாவது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் 75ஆவது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றார்.

குடும்பத்துடன் சின்னி ஜெயந்த்...
குடும்பத்துடன் சின்னி ஜெயந்த்...

பின்பு, மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக இருந்த ஸ்ருதன்ஜெய் நாராயணன் தூத்துக்குடி பயிற்சி துணை ஆட்சியராகவும் பணியாற்றி வந்தார். அதன் பிறகு, இவர் திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, தற்போது விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியராக சுதன் ஜெய் நாராயணன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்காக, நடிகர் சின்னி ஜெயந்த் மகனுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in