எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன நடிகர் அஜித்!

எடப்பாடி பழனிசாமிக்கு அஜித் வாழ்த்து
எடப்பாடி பழனிசாமிக்கு அஜித் வாழ்த்துஎடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன நடிகர் அஜித்!

அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம், உடல்நலக்குறைவால் கடந்த 26-ம் தேதி காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். மேலும் பலர் அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமாரை, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in