`மெத்தனால்’ பயன்பாட்டிற்கு தடை விதிக்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்`மெத்தனால்’ பயன்பாட்டிற்கு தடை விதிக்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

``தமிழகத்தில் தற்கொலைக்கு பயன்படுத்தும் மருந்துக்கு தடைவிதித்தது போல மெத்தனாலுக்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‘’ டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு குறைந்துள்ளது.

டெங்குவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கள்ளச்சாராய விவகாரத்தைப் பொறுத்தவரை 66 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 55 பேரும் வீடு திரும்பும் வரை அவர்களை கண்காணிக்க ஒரு செயல் அலுவலர் நியமிக்கப்படுவார்.

மெத்தனால் மாற்று வழிகளுக்கும் பயன்படுவதால், அதற்கு கட்டுப்பாடுகள் அல்லது தடையோ விதிக்க முடியுமா என்று ஆலோசனை மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே தற்கொலை மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதற்கும் தடை விதிக்க முடியுமா என ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்யப்படும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in