
மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேசும்போது பெண்கள் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அவர் மன்னிப்பு கோரிய நிலையில் அவரை தேசிய மகளிர் ஆணையம் விடவில்லை. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் சார்பில் பரபரப்பான கடிதம் எழுதப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் நடத்தி முடிக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவரத்தை நேற்று முதல்வர் நிதிஷ் குமார் சட்டசபையில் தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் மக்கள் தொகை கட்டுப்படுத்துவது பற்றி சில விஷயங்களை தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்கள் குறித்து அவர் அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக கூறி எதிர்ப்பு கிளம்பியது.
அதாவது ‛‛பீகார் பெண்களிடம் தற்போது கல்வியறிவு அதிகரித்து வருகிறது. பெண்கள் படிப்பதன் மூலம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியும். பெண்கள் திருமணமாகி செல்லும்போது கணவருடன் அடிக்கடி நெருக்கமாக இருக்க வேண்டி இருக்கும். குளிர்காலத்தில் அடிக்கடி நெருக்கமாக இருப்பதால் குழந்தைகள் பிறப்பு அதிகமாக நடக்கிறது.
ஆனால் பெண்கள் கல்வியறிவு பெற்றால் அவர்களுக்கு அனைத்தும் தெரியும். கணவர் நெருக்கமாக இருக்கும்போது எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை அறிந்து கொண்டு இருப்பார்கள். இதற்கு முன்பு பீகாரில் குழந்தை பிறப்பு 4.3 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது 2.9 சதவீதமாக குறைந்திருக்கிறது. இதற்கு பெண்களின் கல்வியறிவு தான் காரணம்'' என்றார்.
நிதிஷ் குமாரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. நிதிஷ் குமார் மன்னிப்பு கோர வேண்டும் என பெண்கள் அமைப்பினர், பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் நிதிஷ் குமார் மன்னிப்பு கோரினார்.‛‛ நான் பேசிய வார்த்தைகளை திரும்ப பெற்று கொள்கிறேன். ஏனென்றால் எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதோடு நான் பெண்களின் கல்வி குறித்து மட்டுமே பேசினேன். என் கருத்து யாரையாவது காயப்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்'' என்றார்.
இந்நிலையில் தான் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்டசபை சபாநாயகர் அவாத் பிகாரி சவுத்ரிக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா கடிதம் எழுதியுள்ளார். இதனால் நிதிஷ் குமாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
‛‛பீகார் முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். பொறுப்பான பதவியில் இருப்பவர் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். இதனை தேசிய மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அவரது இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. நிதிஷ் குமார் பேசிய பேச்சை சட்டசபை அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபற்றி தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா கூறுகையில், ‛‛சட்டசபையில் நிதிஷ் குமார் பேசியிருப்பது என்பது சி-கிரேடு படத்தின் உரையாடல் போல் உள்ளது. இதனை கேட்டு சட்டசபையில் இருந்த ஆண் எம்எல்ஏக்கள் சிரித்தது மிகவும் மோசமான ஒன்றாகும். பீகார் முதல்வரின் செயலும், சைகையும் அசிங்கமான ஜோக் போல் இருந்தது.
மேலும் இந்த விஷயத்தில் இன்னொரு மிக மோசமான செயல் என்னவென்றால் சபாநாயகர் அதனை இன்னும் நீக்கவில்லை. பீகார் சட்டசபை சபாநாயகர் நிதிஷ் குமாருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அவரது பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது நிதிஷ் குமாருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!
அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!
80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… விஞ்ஞானிகள் சாதனை!
தேனியில் பரபரப்பு.. கவுன்சிலர்களின் பிச்சை எடுத்து போராட்டம்!
பிக் பாஸ் நிக்சனின் சில்மிஷ வீடியோ... போட்டியாளர்கள் அதிர்ச்சி!