
அமலாக்கத்துறையின் செயல்பாடு வரும் தேர்தலில் நிச்சயம் காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும் என சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறினார்.
சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’ஆயுத கடத்தல், போதை மருந்து விற்பனை, தீவிரவாதம் மூலம் ஆள் கடத்தல் போன்ற சட்ட விரோதச் செயல்களின் மூலம் பணம் பரிவர்த்தனை நடைபெற்றால் அதனைக் கண்டறியத்தான் அமலாக்கத்துறை உருவாக்கப்பட்டது. அதனை விடுத்து அமலாக்கத்துறையை, பாஜக அரசு எதிர்கட்சிகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது.
உண்மையான வழக்கு விசாரணை என்றால் அமலாக்கத்துறை சம்மன் கொடுத்து விசாரிக்க வேண்டும். ரெய்டு என்பது முறையானது அல்ல. நிச்சயம் இந்த சட்டவிரோத செயல் வரும் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக அமையும்’’ என்றார்.