என்ட்ரி கொடுத்த அதிரடிப்படை... அதிமுகவினர் விரட்டியடிப்பு: பரபரப்பு காட்சிகள்

என்ட்ரி கொடுத்த அதிரடிப்படை... அதிமுகவினர் விரட்டியடிப்பு: பரபரப்பு காட்சிகள்

அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் தொடங்குவதற்கு முன்பாக ஓபிஎஸ் அதிமுக தலைமை கழகத்திற்கு சென்றார். ஈபிஎஸ் உத்தரவின் பேரில் அவரது ஆதரவாளர்கள் முன்கூட்டியே தலைமை கழகத்தில் ஒன்று கூடினர். ஓபிஎஸ் தலைமை கழகம் வருவதை கண்டு அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஓபிஎஸ் ஆதவாளர்களுக்கும், ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் கற்கள், கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். ஒருவருக்கு கத்தி குத்து விழுந்தது. இதனால் அதிமுக தலைமையகம் போர்க்களமாக காட்சியளித்தது.

அதிமுகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள் சேதமடைந்ததுடன், பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.. இதனால் அப்பகுதியில் பரபரப்பு சூழல் நிலவியது. இதையடுத்து, அதிரடிப்படையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களை வன்முறையாளர்களை விரட்டி அடித்தனர். தற்போது காவல்துறை கட்டுப்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகம் வந்துள்ளது. தொடர்ந்து இருதரப்பினரின் ஆதரவாளர்கள் குவிந்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in