மதிமுகவில் நடவடிக்கை எடுக்கக்குழு: வைகோ அறிவிப்பு

மதிமுகவில் நடவடிக்கை எடுக்கக்குழு: வைகோ அறிவிப்பு

மதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான குழு உறுப்பினர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நியமித்துள்ளார்.

மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டதற்கு எதிராக அக்கட்சிக்குள்ளே எதிர்ப்பு கிளம்பியது. திமுகவின் வாரிசு அரசியலுக்கு எதிராக மதிமுகவை துவக்கிய வைகோ, தற்போது தனது வாரிசை கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக நியமிப்பது தவறு என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், மதிமுகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்களை வைகோ நியமித்துள்ளார். தென் சென்னை மேற்கு மாவட்ட அவைத்தலைவர் க.இளவழகன், கடலூர் தெற்கு மாவட் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கே.வி.மோகனசுந்தரம், கோவை மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர் பெ. செல்வராஜ், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி இணைப் பொதுச்செயலாளர் எஸ். மகபூப்ஜான், தேர்தல் பணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் இரா.செந்தில் செல்வன் ஆகியோர் ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர்களாக வைகோவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in