ஸ்டாலினை அவதூறு செய்யும் போஸ்டர்; அண்ணாமலையின் உதவியாளருக்குத் தொடர்பு: கோர்ட்டில் பரபரப்பு தகவல்

ஸ்டாலினை அவதூறு செய்யும் போஸ்டர்; அண்ணாமலையின் உதவியாளருக்குத் தொடர்பு:  கோர்ட்டில் பரபரப்பு தகவல்

தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து  அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் பின்புலமாக இருப்பதாக தமிழக காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை பகுதியில் கடந்த 11- ம் தேதி முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக துறைமுகம் கிழக்கு பகுதி கிளைச் செயலாளர் ராஜசேகர் அளித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மண்ணடியைச் சேர்ந்த ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் வினோத்ராஜ் ஆஜரானார். " இந்த புகாரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர்தான் இந்த சுவரொட்டிகளுக்கு நிதி உதவி செய்ததாக ஆதாரங்கள் கிடைத்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பின்புலமாக உள்ளவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது" என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in