செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்பு... அதிகாரபூர்வமாக அறிவித்தது ஆளுநர் மாளிகை!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

பதவியை ராஜினாமா செய்துள்ள செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக  ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஆளுநர் ஒப்புதல் கடிதம்
ஆளுநர் ஒப்புதல் கடிதம்

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால், கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவர் வகித்துவந்த மின்துறை, நிதி அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை, வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமிக்கும் மாற்றப்பட்டன. இருந்த போதும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடித்து வந்தார்.

சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏழு மாதங்களுக்கு மேலாக அவரது நீதிமன்றக் காவல் நீடிக்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கு ஜாமீன் கோரும் மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “அரசு ஊழியர்கள் குற்ற வழக்கில் சிறை சென்றால் உடனே சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். ஆனால், 200 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பவரை, அமைச்சராக வைத்திருப்பதன் மூலம், மக்களுக்கு இந்த அரசு என்ன சொல்ல வருகிறது?” என கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

இது அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. ஜாமீன் வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் நேற்று செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடியே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சிறை அதிகாரி வழியாக முதல்வருக்கு அனுப்பி வைத்தார்.

செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிவைத்து, அதை ஏற்றுக் கொண்டு செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து விடுவிக்குமாறு முதல்வர் பரிந்துரை செய்திருந்தார்.

அதனையேற்று செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக  ஆளுநர் மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  ஏற்கெனவே அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதை  விரும்பாத ஆளுநர் ரவி, அப்போதே அவர் அமைச்சராக தொடர சம்மதிக்கவில்லை. இந்தநிலையில், தற்போது முதல்வர் பரிந்துரைத்த நிலையில் உடனடியாக  அதை ஏற்று செந்தில் பாலாஜி ராஜினாமாவுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறார் ஆளுநர்.


இதையும் வாசிக்கலாமே...

இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!

‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!

கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in