'புதிய சின்னத்தை கையில் எடுங்கள்' - உத்தவ் தாக்கரேவுக்கு சரத் பவார் அறிவுரை

உத்தவ் தாக்கரே சரத் பவார்
உத்தவ் தாக்கரே சரத் பவார் சிவசேனா பெயர் , வில் அம்பு சின்னம்

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனா பெயரையும், வில் அம்பு சின்னத்தையும் வழங்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்குமாறு தலைவர் சரத் பவார் தங்கள் கூட்டணிக் கட்சி தலைவரான உத்தவ் தாக்கரேவிடம் கூறினார்.

சிவசேனா கட்சியின் பெயரும், 'வில் அம்பு' சின்னமும் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு வழங்கப்படும் என்று நேற்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம், ".இது தேர்தல் ஆணையத்தின் முடிவு, ஒரு முடிவு கிடைத்தவுடன் விவாதம் நடத்த முடியாது. அதை ஏற்று புதிய சின்னத்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். மக்கள் புதிய சின்னத்தை ஏற்றுக்கொள்வார்கள், எனவே பழைய சின்னத்தை இழப்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை.

இந்திரா காந்தியும் இந்த நிலையை எதிர்கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு நுகத்தடியுடன் கூடிய இரண்டு காளைகள் சின்னம் இருந்தது, பின்னர் அவர்கள் அதை இழந்து 'கை'யை புதிய சின்னமாக தேர்ந்தெடுத்தனர், அதை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதேபோல், உத்தவ் தாக்கரேவின் புதிய சின்னத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்" என்று குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு உத்தவ் தாக்கரே தரப்பினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. உத்தவ் தாக்கரே பிரிவு, உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாகக் கூறியதுடன், தேர்தல் ஆணையம் "பாஜக ஏஜெண்டாக" செயல்படுவதாகக் குற்றம் சாட்டியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in