'கல்விக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் அப்துல் கலாம்'... அமித் ஷா புகழாரம்!

அமித் ஷா
அமித் ஷா'கல்விக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் அப்துல் கலாம்'... அமித் ஷா புகழாரம்!

கல்விக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டினார்.

ராமேஸ்வரத்தில் பாஜக சார்பில் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இன்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்ற புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்றார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் நசீமா மரைக்காயர் மற்றும் விஞ்ஞானியும், கலாமின் உதவியாளராகவும் இருந்த ராஜன் ஆகிய இருவரும் ‘டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நினைவுகளுக்கு மரணம் இல்லை’ என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளனர்.

இந்த நூலை வெளியிட்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘’ நான் 1997-ல் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராக ஆனபோது மிகவும் எளிய மனிதரான அப்துல் கலாம் விஞ்ஞானியாக இருந்தார். 1998-ல் இந்தியா கனவுப்பாதை திட்டத்தை முன்னெடுக்க காரணமாக திகழ்ந்தார். அத்தகைய மாமனிதருக்கு இதயத்தில் இருந்து அஞ்சலி செலுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். டாக்டர் அப்துல் கலாம் கல்விக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். இந்தியா ஒரே தேசம்தான் என்பதையே நாம் அனைவரும் முன்னெடுத்து செல்ல வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in