சென்னையில் ஆவின்பால் தட்டுப்பாடு: இதுதான் காரணம்!

ஆவின் பால்
ஆவின் பால்சென்னையில் ஆவின்பால் தட்டுப்பாடு: இதுதான் காரணம்!

சென்னை சோழிங்க நல்லூர், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட தென்சென்னை முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள், வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக பால் கொள்முதல் 10லட்சம் லிட்டருக்கு மேல் குறைந்துள்ளதால் ஆவின்பால் தட்டுப்பாடு பல்வேறு மாவட்டங்களில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சென்னை சோழிங்கநல்லூர் பால்பண்ணையில் 1லட்சம் லிட்டருக்கு மேல் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக பால்முகவர்கள் சங்கத்தலைவர் பொன்னுசாமி கூறுகையில், ‘’சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணைக்கு பால் வரத்து குறைந்து போனதாலும், ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினைகள் காரணமாகவும் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அதிகாரிகளின் அலட்சியமே காரணம்.

சென்னையின் முக்கிய நகரங்களில் பால் விநியோகம் தடைப்பட்டுள்ளது. குறிப்பாக பெருங்குடி, உள்ளகரம், தாம்பரம் உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளில் விநியோகம் செய்ய வேண்டிய சுமார் 1லட்சம் லிட்டருக்கும் மேல் ஆவின் பால் விநியோகம் முற்றிலுமாக முடங்கியது.

அதன் காரணமாக சில்லரை வணிகர்களுக்கு ஆவின் பாலினை வழங்க முடியாமல் பால் முகவர்களும், ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்களும் அல்லல்பட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in